காதலியுடன் நேரத்தை செலவிட காதலன் செய்த மோசமான செயல் : இறுதியில் நேர்ந்த விபரீதம்!!

401

அவுஸ்திரேலியா..

அவுஸ்திரேலியாவில் தன்னை யாரோ கடத்திவிட்டதாக நாடகமாடி காதலியுடன் நேரத்தை செலவிட்ட நபரை பொலிஸார் கைது செய்தனர். காதலுக்கு எல்லையே கிடையாது என்று சொல்வார்கள்.

காதலர்கள் ஒருவருக்கொருவர் நேரத்தை செலவிட எந்த எல்லைக்கும் செல்லும் நிகழ்வுகளை நாம் கண்டிருக்கிறோம். வகுப்பை கட் அடிப்பது முதல் பெற்றோரிடம் பொய் சொல்வது வரை, பெரும்பாலோர் அனைத்தையும் செய்வார்கள்.

ஆனால் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர், இன்னும் கொஞ்சம் அதிகமாக சென்றுள்ளார் என்று சொல்லலாம். அவர் தனது துணைக்கு பதிலாக தனது காதலியுடன் நேரத்தை செலவிட தனது சொந்த கடத்தலை போலியாக உருவாக்க யோசனை செய்தார்.


இதனால் அவர் மட்டும் நேரத்தை செல்வியோடவில்லை, காவல் துறையும் அதிக நேரத்தை வீணாக செலவழிக்கச் செய்துள்ளார். பால் ஐரா எனும் 35 வயது நபர், கடந்த வியாழன் அன்று ஒரு தவறான குற்றச்சாட்டு செய்ததற்காக கைது செய்யப்பட்டார்.

பொலிஸாரின் கூற்றுப்படி, இவரது கடத்தல் நடனத்தால் விசாரணை செயத்தற்காக அரசாங்கத்திற்கும் காவல்துறைக்கும் 25,000 அவுஸ்திரேலிய டொலர் பணமும், சுமார் 100-200 மணிநேர நேரமும் வீணானது.

ஐரா புத்தாண்டுக்கு முந்தைய நாள் மாலை தனது வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது, அவர் தனது கூட்டாளரிடம் டாப்டோவில் ஒரு நித்தியாளரை சந்திக்கப் போவதாக கூறினார்.

பின்னர் ஒரு பாலியல் தொழிலாளியிடமிருந்து அவரது கூட்டாளிக்கு நள்ளிரவு குறுஞ்செய்தி வந்தது. கடத்தல்காரர்கள் ஐராவை கடத்திவைத்துள்ளதாகவும் அவரை விடுவிக்க அவரது பைக்கை தருமாறும், அப்படி கொத்தால் காலையில் ஐரா விடுவிக்கப்படுவார் என்று அந்த குறுஞ்செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஐராவின் கூட்டாளி, அவர் கடத்தப்பட்டதாகவும், அவரது 7,000 டொலர் மதிப்புள்ள டர்ட் பைக்கிற்காக அவர் பணயம் வைக்கப்பட்டிருப்பதாகவும் பாலியல் தொழிலாளியிடமிருந்து குறுஞ்செய்தியைப் பெற்ற பின்னர் காவல்துறையைத் தொடர்பு கொண்டார்.

பொலிஸார் உடனடியாக விசாரணையை தொடங்கி, பல மணி நேர சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து சாட்சிகளை ஆய்வு செய்தனர். இருப்பினும், விசாரணையின் போது, குறுஞ்செய்திகளை அனுப்பிய நேரங்களுக்கிடையில் ​​ஐரா தனது காதலியின் வீட்டிற்குள் பையுடன் நுழைவதை சிசிடிவி கட்சிகளில் தெரிந்தது.

இதையடுத்து, ஐரா தனது சொந்த கடத்தல் கதையை இட்டுக்கட்டியதாக காவல்துறை உறுதிப்படுத்தியது. கடத்தப்பட்டதாகக் கூறப்படும் அடுத்த நாள், ஐரா தனது தந்தையை அழைத்து, அவரைக் கடத்தியவர்களால் காரில் விட்டுச் செல்வதாகக் கூறியது நீதிமன்றத்தில் தெரியவந்தது.

மேலதிக விசாரணையில், ஐரா கடத்தப்பட்டதாகக் கூறும் வொல்லொங்கொங்கிலிருந்து அல்ல, டாப்டோவிலிருந்து அழைப்புகள் வந்தன என்பது தெரியவந்தது. அவர் நீதிமன்றத்தில் ஆஜராகும்போது, ​​பால் ஐராவின் தாய், சகோதரி மற்றும் பங்குதாரர் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த வழக்கு “மிகவும் வினோதமானது” என்று மாஜிஸ்திரேட்டால் விவரிக்கப்பட்டது மற்றும் ஐராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த மாத இறுதியில் அவர் மீண்டும் நீதிமன்றத்திற்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.