காதலி ஆண் பிசாசாக மாறியதால் கொன்றேன்.. கைதான இளைஞரின் அதிர வைத்த வாக்குமூலம்!!

187

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் பல்கலைக்கழக மனைவி கொலை வழக்கில் கைதான இளைஞர், நீதிமன்ற விசாரணையில் தனது காதலி ஒரு ஆண் பிசாசைப் போல் தோன்றியதால் அவரை கொன்றதாக தெரிவித்தார்.

மத்திய லண்டனில் உள்ள The Manslaughter of City பல்கலைக்கழகத்தில் உளவியல் இளங்கலை படித்து வந்த மாணவி சபிதா தன்வாணி (19), கடந்த 2022ஆம் ஆண்டு காதலர் மாரூஃப்பினால் (Maaroufe) படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட மஹர் மாரூஃப்பிடம் Old Baileyயில் சமீபத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது கஞ்சா புகைக்கும் பழக்கத்தால் மாரூஃப் சித்தப்பிரமை பிடித்தவராக மாறியதாகவும், Hallucination எனும் மாயத்தோற்றத்தினால் பாதிக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது. அத்துடன் அவரது காதலில் தன்வாணி தனது கண்களுக்கு முன்பாக ஒரு ஆண் பிசாசாக மாறியதாக மாரூஃப் நம்பியதால் அவரை கொலை செய்ததாக கூறினார்.


மேலும், மாரூஃப்பிற்கு சிகிச்சை அளித்து வரும் மனநல மருத்துவரான கிறிஸ்டியன் பிரவுன், வன்முறை செயலை செய்த நேரத்தில் மாரூஃப் என்ன செய்தார் என்பது குறித்து அவருக்கே தெரியாது என நீதிமன்றத்தில் தெரிவித்தார். பிசாசாக மாறிய ஒரு ஆண் உருவத்தைதான் மாரூஃப் கொலை செய்தார் என அவர் விவரித்தார்.இதனைத் தொடர்ந்து மாரூஃப் மீண்டும் காவலில் வைக்கப்பட்டார்.

அவர் டிசம்பர் 8ஆம் திகதி அன்று Old Baileyயில் தண்டனைக்காக திரும்புவார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்பூர்வமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்த மாரூஃப்புக்கு, 2019ஆம் ஆண்டு ஆகத்து 14ஆம் திகதி அன்று நாடுகடத்தல் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதனால் அவர் புகலிடம் கோரி விண்ணப்பித்த நிலையில், பிரச்சனை தீர்க்கப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.