காதல் வலையில் சிக்க வைத்து பெண்களை நாசமாக்கிய கொடூரன்.. தாய் உதவியுடன் அரங்கேறிய கொடூரம்!!

142

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் கர்வாரில் உள்ள ஷிராசி பகுதியைச் சேர்ந்தவர் அருணா கவுடா மலாலி என்கிற அர்ஜுன். இளம் பெண்களை குறிவைத்து காதல் வலையில் சிக்க வைத்து அவர்களை நெருக்கமாக புகைப்படம் எடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்களை காட்டி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிலையில், அர்ஜுன் மீது ஷிராசி, பனவாசி, குண்டாப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இளம்பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்ததாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனால் அர்ஜுனை கைது செய்ய போலீசார் விரைந்தனர்.

அப்போது போலீசார் மீது திடீரென கற்களை வீசி தாக்கினார். ஆனால் போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவருக்கு உறுதுணையாக இருந்த பாலச்சந்திரா கைதுக்கு பயந்து எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

உடனே போலீசார் அவரை மீட்டு ஹூப்ளி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 3 போலீசாரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட அர்ஜுன் மீது ஷிர்சி ஊரக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், “குற்றம் சாட்டப்பட்ட அர்ஜுனுக்கு அவரது தாய் நாகவேணி உதவி செய்தார். தன்னை நம்பும் பல பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று அர்ஜுன் மிரட்டி அவர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அவரது உறவினரான பாலச்சந்திர கவுடா அவரது பாலியல் நடவடிக்கையை ஆதரித்தார். பாதிக்கப்பட்ட சிலரிடம் நாகவேணி பணம் வசூல் செய்ததும் தெரியவந்தது. தலைமறைவான அவரை தேடி வருகிறோம்,” என்றார்.