காப்பாத்த முடியலயே… 15 மாதம் போராட்டம்… கல்லூரியில் படித்த மகளை இழந்து கதறி துடிக்கும் பெற்றோர்!!

14

கேரள மாநிலத்தில் கோண்டான் குளங்கரா பகுதியில் வசித்து வந்தவர் வாணி ரோமசேகரன். இவர் சட்டக்கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 2023ல் செப்டம்பர் மாதம் வாணி கல்லூரி அருகே சாலையை கடக்க முயற்சி செய்தார்.

அந்த வழியாக வேகமாக வந்த கார் வாணி மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வாணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

சுமார் 15 மாதங்களாக வாணி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி வாணி உயிரிழந்தார். இச்சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.