காரில் அழுகிய நிலையில் கர்ப்பிணியும், அவரது காதலனும்.. சில நாட்களில் குழந்தை பிறக்க இருந்த நிலையில் சோகம்!!

481

அமெரிக்காவில்..

அமெரிக்கா நாட்டின் டெக்ஸோஸ் மாகாணத்தை சேர்ந்த சகானா நிக்கோல் என்ற பெண் அதே பகுதியை சேர்ந்த மேத்யூ குரேரா என்ற இளைஞரை காதலித்து வந்த நிலையில் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் சகானா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

அப்பெண்ணுக்கு இந்த மாதத்தின் இறுதியில் அவருக்கு குழந்தை பிறக்க இருந்தது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு பொருட்கள் வாங்குவதற்காக காதல் ஜோடி வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளனர். ஆனால் அதன் பிறகு இவர்கள் இருவரையும் குடும்பத்தினரால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதனால் பதறியவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காதல் ஜோடியை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் ஊருக்கு வெளியே கார் ஒன்று சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வழியில் நின்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது.


இதையடுத்து போலீசார் விரைந்து சென்று பார்த்த போது காரின் உள்ளே காதல் ஜோடி அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். இருவரின் சடலத்தையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் கொலையா தற்கொலையா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.