இளம் பெண்ணுக்கு எமனாக வந்த பேரூந்து!!

177

சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கரில் ஒருவர் குடிபோதையில் நடுரோட்டில் நாற்காலியில் அமர்ந்தார். அவர் மீது லாரி மோதியது. அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். இதைபோல் மும்பையில் ஒருவரின் செயலால் பேருந்து விபத்துக்குள்ளானது.

மும்பை லால்பாக் பகுதியை சேர்ந்த தத்தாமுரளிதர் (40) என்பவர் நேற்று இரவு குடிபோதையில் பஸ்சில் ஏறினார். பேருந்தின் முன்புறம் டிரைவர் இருக்கை அருகே நின்று கொண்டிருந்தார்.

பேருந்து தாராவி நோக்கி சென்று கொண்டிருந்தது. அங்கு சிக்னல் அருகே கீழே இறங்க வேண்டும் என்று டிரைவரிடம் முரளிதர் வாக்குவாதம் செய்தார். நடத்துனர் அமைதியாக இருக்குமாறும் அடுத்த நிறுத்தத்தில் இறக்கி விடுவதாகவும் கூறினார். அதைக் கேட்காத முரளிதர், திடீரென டிரைவரிடம் சென்று பஸ் ஸ்டியரிங்கை பிடித்து வலுக்கட்டாயமாக பஸ்சை நிறுத்த முயன்றார்.

இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் இருந்த பேருந்து, கார் மற்றும் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதனால் சாலையில் நடந்து சென்ற 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

அப்போது இருசக்கர வாகனம் மோதியதில் அந்த வாகனத்தில் சென்ற வருமான வரித்துறை பெண் ஊழியர் நுபுர் மணியார் (28) உயிரிழந்தார். அப்போது அவர் பயணித்த ஆக்டிவா மீது பேருந்து மோதியதில், அதில் இருந்து நபூர் கீழே விழுந்து பேருந்து அவர் மீது மோதியது. இதில் நுபுருக்கு வயிறு மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அதிக ரத்தம் வெளியேறியதாலும், உடல் உறுப்புகள் பல சேதமடைந்ததாலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த பெண் தான் திருமணம் செய்யவிருந்த பிரதாமேஷுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்தில் பிரதாமேஷின் இரு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது.


டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, 9 வாகனங்கள் மீது மோதியது. விபத்தில் காயமடைந்த 9 பாதசாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பேருந்தின் ஓட்டுநர் கமலேஷ் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், குடிபோதையில் இருந்த தத்தா முரளிதர், பஸ்சை நிறுத்தச் சொன்னார். ஏசி பஸ் என்பதால் பிரச்னை ஏற்படும் என்று கூறினேன்.

ஆனால் தத்தா முரளிதர் என் சட்டையின் காலரைப் பிடித்துக் கொண்டு ஸ்டியரிங்கைத் திருப்ப முயன்றார், என்றார். விநாயகர் சதுர்த்திக்குப் பிறகு, திருமணம் செய்து கொள்ள இருந்த நூபுர் தற்போது விபத்தில் இறந்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக வருமான வரித்துறையினர் வழக்குப்பதிவு செய்து முரளிதரை கைது செய்தனர்.