குழந்தைகளை தவிக்க விட்டு கணவன் மனைவி எடுத்த முடிவு… நெஞ்சை உறைய வைத்த சம்பவம்!!

415

கரூரில்..

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி கல்வார்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் ஐயப்பன். இவரது மனைவி ஜெயா. இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகளும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் கடந்த 10 நாட்களுக்கு முன் சொந்த ஊரை காலி செய்து பஞ்சமாதேவி கிராமத்தில் புதிய வாடகை வீட்டில் குடியேறினர். நேற்று முதல் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளி முடிந்து முதலில் மகன் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீடு உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. மகன் நீண்ட நேரமாக கதவை தட்டியும் கதவு திறக்கப்படவே இல்லை. அக்கம்பக்கத்தினரிடம் சென்று தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அவர்கள் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.தம்பதிகள் இருவரும் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருந்தனர்.

அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் அளித்தனர். குழந்தைகளைத் தனியே தவிக்க விட்டு விட்டு தம்பதிகள் இருவரும் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இத்தகவலால் ஊர் பொதுமக்கள் சம்பவம் நடந்த வீட்டின் முன்பு குவிந்தனர்.


போலீஸார், விரைந்து வந்து தற்கொலை செய்த இருவரது சடலத்தையும் கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சொந்த ஊரை விட்டு பஞ்சமாதேவி கிராமத்தில் குடியேறிய 10 நாட்களுக்குள் கணவன் மனைவி இருவரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.