குழந்தையின் வாய்க்குள் ஸ்பாஞ்சை திணித்து உள்ளாடையால் இறுகக் கட்டி கொன்ற தாய்: வெளியாகியுள்ள திடுக்கிடவைக்கும் தகவல்கள்..!

399

பிரித்தானியாவில் கடுமையான ஆட்டிசப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தையை சமாளிக்க இயலாமல் அதன் தாயே கொலை செய்த விவகாரத்தில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆகத்து மாதம் 16ஆம் திகதி, மேற்கு லண்டனிலுள்ள ஆக்டன் என்ற பகுதியில் ஒரு பெண் பொலிஸ் நிலையம் சென்று கொடுத்த தகவலின்பேரில் வீடு ஒன்றிற்கு விரைந்த பொலிசார் அந்த வீட்டில் 10 வயது சிறுவன் ஒருவன் இறந்து கிடந்ததைக் கண்டதாக செய்திகள் வெளியாகின. அந்த சம்பவத்தில் பல புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கடுமையான ஆட்டிசம் மற்றும் Cohen syndrome என்னும் அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டு, சரியான பார்வை இல்லாமல், பேச இயலாமல், நடக்கவும் இயலாமல் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் Dylan Freeman என்ற அந்த சிறுவனை ஊரடங்கு காலத்தில் யாருடைய உதவியுமின்றி, சமாளிக்க இயலாமல், அவனது தாயான Olga Freeman (40) கொலை செய்துவிட்டதாக தகவல் வெளியானது.

தற்போது, தனது மகனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து அவனை தூங்கவைத்துவிட்டு, அவனது வாய்க்குள் ஒரு ஸ்பாஞ்சை வைத்து, அது வெளியே வந்துவிடாமல் இருப்பதற்காக, தனது உள்ளாடையால் அதை இறுகக்கட்டியதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் Olga என்னும் அந்த தாய்.


மேலும் மகனைக் கொன்றுவிட்டு, அவரே பொலிஸ் நிலையம் சென்று, தன் மகனைக் கொன்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவைச் சேர்ந்தவரான Olga என்னும் அந்த தாய் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டுள்ளார் அவர்.

நவம்பர் மாதம் 4ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார் Olga. இதற்கிடையில், வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த அக்கம் பக்கத்தவர்கள் அனைவருமே, Olga அந்த குழந்தையை கவனித்துக்கொள்ள தனியாக போராடி வந்ததாகவும், மிகவும் மன அழுத்தத்துடனும் சோர்வுடனுமே அவர் காணப்பட்டதாகவும் கூறியுள்ளார்கள்.