இந்திய கிரிக்கெட் ஆல்ரவுண்டர் வீரரான ஹர்திக் பாண்ட்யா, செர்பிய நடிகை நடாசா ஸ்டான்கோவிச்சை திருமணம் செய்துள்ளார்.
இவர்களுக்கு கடந்த மாதம் 30-ந்தேதி ஆண் குழந்தை பிறந்தது.
இன்ஸ்டாகிராமில் படத்தை வெளியிட்டு ஹர்திக் பாண்ட்யா குழந்தை பிறந்ததை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில், தற்போது மருத்துவமனையில் டாக்டர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக கேக் வெட்டி கொண்டாடினார். இதுகுறித்த படத்தையும் இஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும், அதில் ‘‘என்னுடைய குழந்தையை இந்த உலகத்திற்கு காட்டிய மருத்துவர்களுக்கு நன்றி, எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்’’ எனத்தெரிவித்துள்ளார்.