குழந்தை பிறந்த 45 நாட்களில் அவலம்.. இளம் பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற கொடூர நபர்!!

147

புதுக்கோட்டை மாவட்டம் புளியஞ்சோலை பகுதியில் வசித்து வருபவர் ரஹ்மான். இவருக்கும் சகுபா நிஷா (23) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது.

கடந்த 45 நாட்களுக்கு முன்பு நிஷாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. பிரசவத்திற்காக தாய் வீட்டுக்குச் சென்ற நிஷா, மூன்று நாட்களுக்கு முன்புதான் கணவர் வீட்டுக்குத் திரும்பினார்.

நேற்று முன்தினம் நிஷா மர்மமான முறையில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் நிஷாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் நிஷா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக மனைவியை கத்தியால் குத்தி கொன்றதாக ரஹ்மான் வாக்குமூலம் அளித்துள்ளார்.

எதற்காக கொலை செய்தீர்கள் என்று கேட்டதற்கு அவர் சரியாக பதிலளிக்கவில்லை. மேலும் அவரிடம் விசாரித்த போது, ​​மனைவியை தான் கொல்லவில்லை என்று கூறியுள்ளார்.


போலீசாருக்கு பயந்து கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்ததாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது ரஹ்மான் வீட்டின் பின்புறம் வசித்த முகமது அபு உஸ்மான் என்ற வாலிபரின் ஆடைகளில் ரத்தக்கறை இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

அவரை கைது செய்து விசாரித்தபோது, ​​நிஷா அணிந்திருந்த அரை பவுன் தங்க நகையை பறிப்பதற்காக முகமது கொன்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.