கொரோனாவுக்கு பயந்துட்டு மூட்டை முடிச்சுகளுடன்… சென்னையை காலி செய்யும் மக்கள்!!

1118

கொரோனா பாதிப்பால் சென்னையை காலி செய்து விட்டு மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் சொந்த ஊருக்கு சரக்கு வாகனத்தில் செல்லும் நிலையில்,

செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, சோதனையிட்டனர்.

இ பாஸ் மற்றும் உரிய உரிய ஆவணங்கள் இல்லாமல் இல்லாமல் செங்கல்பட்டு மாவட்ட எல்லை கடந்து செல்ல போலீஸ் தடை விதித்துள்ளனர்.


நேற்று ஒரே நாளில் 402 இருசக்கர வாகனங்கள் 4 ஆட்டோக்கள் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்,

மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக‌ இதுவரை 24 ஆயிரத்து 800 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இதுவரை 24 ஆயிரத்து 730 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.