கொலைவெறியோடு ஓடிவந்த யானை… தைரியமாக செல்பி எடுத்த இளைஞர்! இறுதியில் நடந்தது என்ன தெரியுமா?

948

வேகமாக ஓடிவந்த காட்டு யானை முன்னால் இளைஞர் செல்பி எடுத்த சம்பவம் வைரலாகி வருகின்றது.

கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகாவில் பூனத்முட்டே என்னும் கிராமம் உள்ளது. வனப்பகுதியை ஒட்டி இருப்பதால் இந்த கிராமத்திற்கு காட்டு யானைகள் அடிக்கடி வருவதுடன், மனிதர்களை தாக்கவும் செய்கின்றது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் காட்டு யானை ஒன்று வேகமாக தலைதெறிக்க ஓடி வந்துள்ளது. அப்போது ஆட்டோவில் சென்ற இளைஞர் ஒருவர் யானை வருவதை பார்த்து சற்றும் பயம் கொள்ளாமல் யானைக்கு முன் நின்று செல்பி எடுத்துள்ளதோடு, இதனை காணொளியாகவும் எடுத்துள்ளார்.


இளைஞருக்கு மிக அருகில் நெருக்கமாக ஓடிவந்த யானை கடைசி நொடியில் மாற்று வழியில் ஓடியதால், அதிர்ஷ்டவசமாக இளைஞர் உயிர் தப்பியுள்ளார்.