கோயில் குளத்திற்கு துணி துவைக்கச் சென்ற 3 சிறுமிகளுக்கு நேர்ந்த பரிதாபம்!!

395

அஸ்விதா……

கும்மிடிப்பூண்டியை சேர்ந்த சுமதி தனது 15 வயது மகள் அஸ்விதாவுடன் அங்காளம்மன் கோயில் குளத்திற்கு துணி துவைக்கச் சென்றுள்ளனர்.

அப்போது அதேபகுதியைச் சேர்ந்த ஜோதிலட்சுமியுடன், சிறுமிகள் ஜீவிதா, நர்மதாவும் குளத்திற்கு வந்துள்ளனர்.

சிறுமிகள் மூன்று பேரும் குளத்தில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்த நிலையில், ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.


நீரில் மூழ்கி சிறுமிகள் தத்தளிக்கவே, காப்பாற்றச் சென்ற சுமதியும், ஜோதிலட்சுமியும் ஆழத்தில் மூழ்கினர்.

அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் வந்த தீயணைப்புத்துறையினர் நீரில் மூழ்கிய 5 பேரையும் சடலங்களாக மீட்டனர்.