சீனாவில் புழு மழை… அச்சத்தில் பொதுமக்கள் : வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

547

சீனாவில்….

பொதுவாக கனமழை, பருவமழை, ஆலங்கட்டி மழை, புயல் மழை தான் இது வரை நாம் எல்லோரும் பார்த்துள்ளோம். பெரும் பணக்காரர்கள் நடத்தும் விழாக்களில் பணமழை கூட சினிமாக்களில் பார்த்துள்ளோம்.

ஆனால் சீனாவில் தலைநகர் பீஜிங்கில் முக்கிய சாலையில் வாகனங்கள் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் மீது புழுக்கள் மழையாக பொழிந்துள்ளன. செல்லும் பாதையெங்கும் புழுக்கள் நெளிவதை பார்த்து பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வரிசையாக நிற்கும் கார்களின் மீது பெரிய, தடிமனான அளவுள்ள, பழுப்பு நிறத்தில் வளைந்தும், நெளிந்தும் போர்வை போன்று புழுக்கள் குவிந்துள்ளன.


வானில் இருந்து புழுக்கள் ஏதும் மேலே பட்டுவிடக் கூடாது என்பதற்காக சிலர் குடை பிடித்தபடியே செல்வதையும் காணமுடிகிறது. இதற்கான காரணம் இதுவரை என்னவென்றே தெரியவில்லை.

பலத்த காற்றில் அடித்து வரப்பட்டு போடப்பட்டு இருக்கும் என மதர் நேச்சர் என்ற அறிவியல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சூறாவளியில் இந்த பூச்சிகள் சிக்கும்போது இதுபோன்று நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இது குறித்து சீன பத்திரிகையாளரான ஷென் ஷிவெய் இந்த , வீடியோவில் உண்மை இல்லை. முற்றிலும் போலியானது. நான் பீஜிங்கில் தான் வசித்து வருகிறேன்.

கடந்த சில நாட்களாக மழையே இல்லை. மரங்களில் இருந்து புழுக்கள் கீழே விழுவது இயல்பானது தான். வசந்த காலத்தின்போது இதுபோன்று ஏற்படும் எனவும் சிலர் தெரிவித்துள்ளனர்.

ஒரு சிலர், அவை புழுக்கள் அல்ல என்றும் அவை கம்பளிப்பூச்சிகள் என பதிவிட்டு வருகின்றனர். எது எப்படியாக இருந்தாலும் என்ன தான் அறிவியல் வளர்ச்சி அடைந்திருந்தாலும் இது போன்ற கேள்விகளுக்கும், விளைவுகளுக்கும் பதிலோ, காரணங்களோ கிடையாது .