சீனாவில்..
சீனாவில் சிச்சுவான் பகுதியைச் சேர்ந்த காதலன் வீட்டிற்கு முதன்முறையாக சென்றிருக்கிறார். அங்கு அவர் இரண்டு நாட்கள் காதலன் வீட்டில் தங்கி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் அங்கே சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, காதலன் வீட்டிற்கு அந்த இளம் பெண் சென்ற நிலையில், அவருக்கு மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. அங்கே நூடூல்ஸ், ஃபிரைட் முட்டைகள் என வழக்கமான உணவு வகைகள் இருந்துள்ளது.
காதலன் வீட்டில் ஸ்பெஷலாக உணவு வகைகளை எதிர்பார்த்திருந்த காதலி, வழக்கமான உணவுகள் இருப்பதை கண்டதால் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளார்.
மேலும், அவர் அந்த வீட்டில் தங்கி இருந்த இரண்டு நாட்களும் இது போன்ற உணவுகளை தான் அந்தப் பெண்ணுக்கு வழங்கியுள்ளார். இந்நிலையில் காதலன் வீட்டில் வழங்கிய உணவு குறித்து அவரிடமே மன வருத்தத்துடன் காதலி கூறியுள்ளார்.
மேலும், இறுதியில் இந்த வீட்டில் திருமணத்திற்கு பிறகு உன்னுடன் சேர்ந்து வாழ முடியாது என கூறிக் காதலை அவர் பிரேக் அப் செய்ததாக கூறிவிட்டு வெளியேறியுள்ளார்.
எத்தனையோ காரணங்களுக்காக பல காதல்களில் பிரிவு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், காதலன் வீட்டில் உணவு பிடிக்கவில்லை எனக்கூறி காதலை வேண்டாம் என முடிவெடுத்த இந்த பெண் குறித்த செய்தி தற்போது படும் வைரலாகி வருகிறது.