தனியார் மருத்துவமனை அலட்சியம்.. பிரசவத்தின் போது தாய், குழந்தை உயிரிழந்த சோகம்!!

15

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகரில் உள்ள துவரங்குறிச்சியை சேர்ந்தவர் பிரவீன். இவரது மனைவி சந்தியா வயது 32. இவர் பிரசவத்திற்காக பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் ராஜம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து குழந்தை இறந்து பிறந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சந்தியா உடல்நிலை மோசமானதை தொடர்ந்து சந்தியாவை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை நிர்வாகமே தஞ்சாவூருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் செல்லும் வழியிலேயே சந்தியா இறந்துவிட்டார். இதனை அடுத்து சந்தியாவின் உறவினர்கள், மருத்துவமனையின் அலட்சியத்தால் தான் சந்தியாவும் குழந்தையும் இறந்து விட்டதாக கூறி மருத்துவமனை முன்பு ஆம்புலன்ஸில் உடலை வைத்தபடியே முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இது பற்றி தகவல் அறிந்த பட்டுக்கோட்டை நகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உறவினர்களிடத்தில் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர்.

மேலும் இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள், மருத்துவர்கள் ஆகியோர் இடத்தில் மருத்துவ ரீதியான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.