தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட பெண்… அடுத்த 24 மணிநேரத்தில் எடுத்த அதிரடி முடிவு!!

559

அர்ஜென்டினா…

அர்ஜென்டினாவைச் சேர்ந்த 25 வயது சோஃபி மயூரே (Sofi Maure), பிப்ரவரியில் Sologamy சொல்லப்படும் தன்னைத் தானே திருமணம் செய்வதாக சமூக ஊடகங்களில் அறிவித்தார்.

அப்போது ஒரு வெள்ளை நிற திருமண ஆடை மற்றும் தங்கத் தலைப்பாகை அணிந்திருக்கும் படங்களையும் அவர் வெளியிட்டார். மேலும், திருமண கேக்கை தானே தயார் செய்ததாகவும் கூறினார்.

சிலர் அவரது முடிவிற்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்தனர். ஆனால். ஒரு சிலர், இது வெறும் கவன ஈர்ப்புக்கான செயல் என விமர்சித்தனர். ஆனால், சோஃபியின் எண்ணம் நீண்ட காலம் நீடிக்கவில்லை.


பலர் ஆதரவாக இருந்தபோதிலும், தன்னைத்தானே விரும்பி திருமணம் செய்துகொண்ட அவர் தனது உறுதிப்பாட்டிலிருந்து வெறும் 24 மணிநேரத்திலேயே மீறினார்.

ஏனெனில், திருமணம் செய்த ஒரு நாளுக்கு பிறகு பிப்ரவரி 20-ஆம் திகதி அன்று தனது தான் விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்தார். அவர் தனது சமூக வலைதளபக்கத்தில் “அப்டேட்: ஒரு நாள் நான் என்னை திருமணம் செய்து கொண்டேன்.

இனியும் என்னால் அதை தாங்க முடியாது. இப்படி ஒரு சூழலில் எவ்வாறு விவாகரத்து செய்வது என்பதை நான் பார்க்கிறேன்,” என்று அவர் பதிவிட்டார்.

இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் விறுவிறுப்பான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு பயனர், “திருமணமான முதல் 3 மாதங்களில் எக்ஸ்பிரஸ் விவாகரத்து உள்ளது, எனவே கவலைப்பட வேண்டாம்.” என்று கூறியுள்ளார்.

மற்றோருவர் “ஒரு நல்ல வழக்கறிஞரைப் பாருங்கள்’ என்று கேலி செய்தார். மூன்றாவதாக ஒருவர், “உங்களால் உங்கள் முடிவில் நிலைத்திருக்க முடியவில்லை” என்று கருத்து தெரிவித்தார்.