தன்னை விட 27 வயது மூத்தவரை மணந்து கொண்ட அழகிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

427

தன்னை விட 27 வயது அதிகமான நபரை திருமணம்..

அமெரிக்காவில் தன்னை விட 27 வயது அதிகமான நபரை திருமணம் செய்து கொண்ட அழகிய இளம்பெண் தனது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

Utahவை சேர்ந்த இளம்பெண் Kelsey Kammeyer Allen (25). இவரும் Paul Allen (53) என்பவரும் கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டனர். ஏற்கனவே திருமணமாகி மூன்று பிள்ளைகள் Paul Allenக்கு உள்ளனர். இதோடு பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.

தன்னை விட 27 வயது அதிகமானவருடன் வாழ்வது குறித்து Kelsey மனம் திறந்துள்ளார். அவர் கூறுகையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் Paulஐ நான் சந்தித்தேன்.


அவருடன் நட்பாகி பின்னர் காதல் ஏற்பட்டது. இருவரும் கடந்தாண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டோம். சாலையில் நாங்கள் கைகோர்த்து செல்லும் போதும், முத்தம் கொடுத்து கொள்ளும் போதும் பலரும் எங்களை வித்தியாசமாக பார்ப்பார்கள். ஏனெனில் எங்களின் வயது வித்தியாசம் தான் அவர்களை அப்படி பார்க்க வைக்கிறது.

நாங்கள் இருவரும் குழந்தை பெற முயற்சிக்க தொடங்கிய போது என் கணவருக்கு பேரன் பிறந்துவிட்டதாக செய்தி வந்தது.அதாவது நான் தாயாகமலேயே பாட்டியாகிவிட்டேன். வயது என்பது வெறும் எண்ணிக்கை தான், அது பற்றி நாங்கள் இருவருமே கவலைப்படவில்லை.

பணத்துக்காக தான் வயதானவரை இளம்பெண்கள் மணந்து கொள்வார்கள் என்ற கருத்து உள்ளது, ஆனால் அது முற்றிலும் தவறாகும். என் கணவர் மிகவும் நல்லவர், அவரை நான் மிகவும் நேசிக்கிறேன் என கூறியுள்ளார்.