தமிழில் பேசியதால் மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியை.. என்ன நடந்தது?

351

தமிழகத்தில்..

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது என்பது உத்தரவாக உள்ளது. அதேநேரம் பள்ளிக்களில் குறும்புத்தனம் செய்யும் மாணவ, மாணவிகளை, கண்டிக்கிறார்கள்.. பள்ளிகளுகக்கு வீட்டுப்பாடம் செய்யாமல் வருவோர், படிக்காமல் வருவோரையும் கண்டிக்கிறார்கள். ஒழுங்கீனமாக நடக்கும் குழந்தையை சில ஆசிரியர்கள் பயமுறுத்தி சரி செய்யும் நோக்கில் அடிக்கவும் செய்கிறார்கள்.

அப்படி அடிக்கும் ஆசிரியர்கள், சில நேரங்களில் வரம்பு மீறி நடந்து கொள்வது விபரீதத்தில் முடிகிறது. அப்படித்தான் சென்னை ராயபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விபரீதமாக மாறி காவல்துறை வரை சென்றுள்ளார்கள். பள்ளியில் மாணவர்களை கண்டிப்பதற்கு ஆசிரியர்களுக்கு உரிமை உள்ளது என்றாலும், எதற்காக கண்டிக்கிறார்கள் என்பதும் மிக முக்கியமாக பார்க்கிறார்கள் பெற்றோர்கள்.

ஆசிரியர்கள் தவறான காரணங்களுக்காக கண்டித்தால் அவர்களை தட்டிக்கேட்கவும் செய்கிறார்கள். அப்படித்தான் இங்கும் தட்டிக்கேட்டுள்ளார்கள் பெற்றோர்கள். என்ன நடந்தது என்பதை பார்ப்போம். சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் வகுப்பறைக்குள் தமிழில் பேசியதால் 5ம் வகுப்பு மாணவனின் காதை பிடித்துத் திருக்கி உள்ளாராம் பள்ளி ஆசிரியை நாயகி


மாணவனின் காதை ஆசிரியை ஓங்கி திருகியதால், காது சதை கிழிந்து அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் மாணவர். இதனால் மாணவரை மருத்துவமனையில் அனுமதித்த பெற்றோர், பின்னாடியே பள்ளிக்கு சென்று ஆத்திரத்துடன் ஆசிரியையையும் தாக்கி உள்ளனர். அப்போது தான் என்ன நடந்தது என்பது பள்ளியில் உள்ளவர்களுக்கு தெரியவந்துள்ளது.

உடனடியாக விரைந்து வந்த ராயபுரம் போலீசார், சம்பவம் குறித்த விசாரித்தனர். விசாரணைக்கு பின்னர் மாணவரின் காதை பிடித்து திருக்கி காயப்படுத்திய ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்தனர் . தொடர்ந்து ஆசிரியை நாயகியிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். தமிழில் பேசியதால் ஆத்திரம் அடைந்த ஆசிரியை காதை பிடித்து திருகி மாணவனை படுகாயப்படுத்திய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.