தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தர் மரணம்!!

841

தமிழீழ விடுதலை இயக்கம்……

தமிழீழ விடுதலை இயக்கம் – ரெலோவின் ஸ்தாபகர்களில் ஒருவரான குட்டிமணியின் பாரியார் இராசரூபராணி இயற்கை எய்தியுள்ளார்.

இவரின் மரண செய்தி அறிந்து தாம் வேதனையடைவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இவர் விடுத்துள்ள அறிக்கையில்,

தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகராக எமது இயக்கத்தின் முதுகெலும்பாக செயல்பட்டவர் குட்டிமணி.


இவரது துணைவியார் இன்று மரணமடைந்த செய்தியறிந்தோம்.

அன்னாரின் பிரிவால் துயருற்று இருக்கும் குடும்பத்தினருக்கும் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எமது தமிழ் ஈழ விடுதலை இயக்க உறுப்பினர்கள் சார்பாகவும்.

எமது ஆழ்ந்த இரங்கல்களையும் , கண்ணீர் அஞ்சலிகளையும் தெரிவித்துக்கொள்ளுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.