தலையில் திகுதிகுவென பற்றி எரிந்த தீ… அலறி கூச்சலிட்ட நடிகை: அதிர்ச்சி வீடியோ!!

245

சவி மிட்டல்..

பிரபல பாலிவுட் நடிகை சவி மிட்டல். இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாது சின்னத்திரையிலும் முத்திரை பதித்து வருகிறார். அத்துடன் தயாரிப்பாளராகவும் தம்மை உயர்த்திக் கொண்டவர். பன்முகத்திறமை கொண்ட சவி மிட்டல் பாலிவுட் சீரியல்களில் நடித்துள்ளார். இவருடைய மகள் ஹரீஸா.

இவருக்கு 2022ல் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர். அதன் பிறகு நடிப்பு, மாடலிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது சவி மிட்டல் அதிர்ச்சி தரும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தபோது அவரது தலையில் திடீரென முடியில் தீப்பற்றி விட்டது. அதை அவர் கவனிக்கவே இல்லை.

உடன் நடித்த சக நடிகர் கரண் தக்க சமயத்தில் அவரை காப்பாற்றியுள்ளார். இது குறித்து சவி மிட்டல் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் ’நான் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தபோது இது நடந்திருக்கிறது.


இதைப் பார்த்து நான் பயந்துவிட்டேன். எதேச்சையாக இது கேமராவிலும் பதிவாகி இருக்கிறது. இது நடக்கும்போது என்னை காப்பாற்றிய சக நடிகர் கரணுக்கு நன்றி’ என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Chhavi Mittal (@chhavihussein)