இந்தியா…..
இந்தியாவில் இறந்து போன தாத்தாவின் சடலத்தை பிரிட்ஜில் வைத்து பேரன் பாதுகாத்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
தெலுங்கானாவின் வாரங்கல்லில் 93 வயது மதிக்கத்தக்க முதியவருடன் 23 வயதான பேரன் நிகில் வசித்து வந்தார்.
நிகிலுக்கு வேலையில்லாததால் தாத்தாவின் பென்ஷன் பணத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக நிகிலின் தாத்தா இறந்துவிட, சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி பிரிட்ஜில் ஒளித்து வைத்துள்ளார்.
வீட்டிலிருந்து துர்நாற்றம் வரவே அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சோதனையிட்டுள்ளனர்.
அப்போது நிகில் சடலத்தை மறைத்து வைத்தது தெரியவந்தது, இதுகுறித்து கூறுகையில், மூன்று நாட்களுக்கு முன்னர் தாத்தா இறந்துவிட்டதாகவும், இறுதிச்சடங்குகளை செய்ய பணமில்லாததால் சடலத்தை மறைத்து வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும் பென்ஷன் பணத்துக்காக நிகில் இறந்ததை மறைத்து வைத்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.