தாய் வீட்டிற்கு சென்று திரும்பிய புதுமணத்தம்பதி..கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் விழுந்த கார்!!

491

கேரளாவில் கார் கிணற்றுக்குள் விழுந்த விபத்தில் புதுமணத்தம்பதி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

இந்திய மாநிலம் கேரளாவில் உள்ள ஆலுவாவில் வசித்து வருபவர் கார்த்திக். இவர் தனது மனைவி விஸ்மயாவை அவரது தாயார் வீட்டிற்கு ஆயுத பூஜை விடுமுறைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.

இருவரும் காரில் ஆலுவாவில் இருந்து திரும்பினர். அவர்கள் பயணித்த கார் கொளஞ்சேரி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் சாலையோரத்தில் இருந்த கிணற்றின் சுற்றுச் சுவரை உடைத்துக்கொண்டு தலைகீழாக விழுந்துள்ளது. கார்த்திக், விஸ்மயா இருவரும் பயத்தில் தங்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டுள்ளனர்.

சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து தம்பதியரை பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் புதுமணத்தம்பதி இருவரும் எந்த காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.