திருமணத்தன்று..
இன்றைய காலகட்டத்தில் நம்மை சுற்றி நடக்கும் ஏராளமான விஷயங்கள், இணையத்தில் அதிகம் வைரல் ஆவதை நாம் பார்த்திருப்போம். இதில், வகை வகையான கண்டென்ட்டுகள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டே உள்ளன. அதில் சில விஷயங்கள் அதனை பார்க்கும் நேரத்தில் ஒரு தாக்கத்தை உருவாக்கும். அடுத்த சில நிமிடங்களில் கூட அவற்றை நாம் கடந்து செல்ல முடியும்.
ஆனால், அதே வேளையில் இன்னும் சில வீடியோக்கள் நாம் பார்த்து பல மணி நேரம் கடந்தால் கூட, அது நம்மிடையே ஏற்படுத்திய தாக்கம் என்பது சிறிதளவு கூட குறையாமல் அப்படியே இருக்கும். அப்படி வைரலாகும் விஷயங்கள், ஒட்டுமொத்த நெட்டிசன்களின் கவனத்தை பெறுவதுடன் மட்டுமில்லாமல், மிகவும் எமோஷனல் ஆகவும் பலரை உணர வைக்கும்.
இந்நிலையில், தற்போது அப்படி ஒரு வீடியோ தான் நெட்டிசன்கள் பலரையும் வெகுவாக கவர்ந்திழுத்து வருகிறது. பொதுவாக, திருமணம் என்றாலே மிகவும் ஸ்பெஷலான ஒரு தருணமாகும். மணமக்கள் இருவரின் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நாளாக இந்த தினம் பார்க்கப்படும் நிலையில், பலரும் இந்த நாளை இன்னும் ஸ்பெஷலாக்க அசத்தலான சில விஷயங்களை செய்து வருகின்றனர்.
அப்படி தனது திருமணத்திற்கு மணப்பெண் செய்த காரியம் தான், இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது. இது தொடர்பாக வைரலாகி வரும் வீடியோவின் படி, திருமணத்திற்கு பிறகான வரவேற்பு நிகழ்ச்சியில் பெற்றோர்கள் நடனமாடி கொண்டிருக்கும் போது, மணப்பெண்ணாக இருக்கும் லவுரா என்பவர், திடீரென அங்கிருந்து பதுங்கி வெளியேறி, மீண்டும் வரும் போது அவரது பாட்டி ஒரு நிமிடம் அப்படியே வாயடைத்து போகிறார்.
இதற்கு காரணம், வெளியே சென்ற மணப்பெண் லவுரா, பல ஆண்டுகளுக்கு முன் தனது பாட்டி, அவரின் திருமணத்திற்கு அணிந்திருந்த கவுனை அணிந்த படி வரவேற்பு அறையில் என்ட்ரி கொடுத்தது தான். இதனைக் கண்டதும் அவரது பாட்டி, அங்கிருக்கும் அனைவரிடமும் உணர்ச்சி பொங்க அது என்னுடைய கவுன் என திரும்ப திரும்ப கூறுகிறார்.
புதிது புதிதாக ஆடைகளை இன்றைய காலத்தில் மணமக்கள் அணிந்து கொள்ளும் வேளையில், பல ஆண்டுகளுக்கு முன் பாட்டி அணிந்த திருமண கவுனை பேத்தி அணிந்ததும், அதற்கு பாட்டி கொடுத்த ரியாக்ஷனும் இணையவாசிகள் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
View this post on Instagram