இந்தியாவில் திருமணமான 2 மாதத்தில் மனைவியை கணவன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் சித்ரதுர்காவை சேர்ந்தவர் சந்திரப்பா. இவருக்கும் உமா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த மே மாதம் 28ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் சந்திரப்பாவுக்கு வேறு பெண்ணுடன் ரகசிய தொடர்பு இருப்பதை உமா கண்டுபிடித்து அது குறித்து கணவரிடம் கேட்டுள்ளார்.
இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்ட நிலையில் நேற்று முன் தினம் உமா வீட்டில் சடலமாக தூக்கில் தொங்குவதாக அவர் தந்தை ராமாபோவிக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சந்திரப்பா வீட்டுக்கு சென்று மகள் சடலத்தை பார்த்து கதறி அழுதார். அவர் பொலிசில் அளித்துள்ள புகாரில், என் மகளை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சந்திரப்பா துன்புறுத்தி வந்தார்.
உமா இறப்பதற்கு முன்னர் எனக்கு போன் செய்தார், அப்போது சந்திரப்பா தொடர்பு வைத்திருக்கும் பெண்ணுடன் வீடியோ அழைப்பில் பேசியதாகவும் அது குறித்து தான் கேட்டதற்கு தன்னை அடித்து உதைத்ததாகவும் கூறினார்.
உமாவை, சந்திரப்பா தான் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகம் ஆடுகிறார் என தெரிவித்தார்.
புகாரை தொடர்ந்து சந்திரப்பாவை கைது செய்த பொலிசார் அவரிடம் தங்கள் பாணியில் விசாரித்தனர். அப்போது மனைவியை கொலை செய்ததை அவர் ஒப்பு கொண்டார். இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட அவரிடம் மேலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.