அமெரிக்காவில் தம்பதிக்கு திருமணம் நடக்கவிருந்த சமயத்தில் அங்கு வந்த பெண்ணொருவர், தான் கர்ப்பமாக உள்ளதாகவும் தனது வயிற்றில் உள்ள குழந்தைக்கு மணமகன் தான் தந்தை என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
Michiganல் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ காட்சி டிக் டாக்கில் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது. அதில் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமண நிகழ்வு நடக்கிறது. அந்த இடத்தில் மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் இருந்தனர்.
சில நிமிடங்களில் இருவரும் கணவன், மனைவியாக மாறவிருந்தனர். அப்போது திடீரென அங்கு பெண்ணொருவர் மணமகனை நோக்கி கத்தி கொண்டே வந்தார். பின்னர் ஆண்டனி, நான் அழைப்பது உனக்கு கேட்கவில்லையா, என்னை யார் என்றே தெரியாதது போல நடிக்கிறாயா?
என் வயிற்றில் வளர்வது உன் குழந்தை தான் என கூச்சலிட்டார், இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது திடீரென கூட்டத்தில் இருந்த பெண் கோபமாக தன்னிடம் இருந்த பூக்களை கர்ப்பமாக இருப்பதாக கூறிய பெண் மீது தூக்கியெறிந்தார்.
இதோடு இங்கிருந்து நீ வெளியில் போ என சத்தம் போட்டார், பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தினார்கள்.
கோபப்பட்ட அப்பெண் மணமகளின் மகள் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்துக்கு பின்னர் அந்த திருமணம் நடந்ததா, நின்றதா என்ற விபரம் வெளியாகவில்லை. இது தொடர்பான வீடியோ 9.9 மில்லியன் முறை பார்க்கப்பட்டு மிகவும் வைரலாகியுள்ளது.