திருமண அழைப்பிதழில் இருந்த ஆபாச இணையத்தள முகவரி : அதிர்ந்த நெட்டிசன்கள்.. பின்னணி என்ன?

552

திருமண பத்திரிக்கையில்..

குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் சூழ நடைபெறும் திருமணம் என்பாது மணமக்கள் இருவரின் வாழ்விலும் இரண்டாம் கட்டத்திற்கான தொடக்கமாகவும் பார்க்கப்படுகிறது.

அப்படிப்பட்ட திருமண நிகழ்வை நடத்துவதற்கு முன்பாக, நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வையும் பார்த்து பார்த்து மணமக்களின் குடும்பத்தினர் செய்வார்கள். இந்த திருமண நிகழ்வில் மிக முக்கியமான வேலையாக இருப்பது, பத்திரிக்கை அடிப்பது தான்.

மணமக்களின் பெயர்கள், பெற்றோர்கள் விவரங்கள், மண்டபம் தொடர்பான தகவல் என அனைத்துமே இந்த திருமண பத்திரிக்கை மூலம் தான் தெரிந்து கொள்ள முடியும்.


அப்படி ஒரு சூழ்நிலையில், திருமண பத்திரிக்கையில் இருந்த தவறு தொடர்பான செய்தி ஒன்று, இணையவாசிகள் பலரையும் அதிர வைத்துள்ளது. இது தொடர்பான விவரங்களை திருமணம் நடக்க போகும் மணப்பெண் ஒருவரே தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

தற்போதுள்ள காலத்தில், திருமண பத்திரிக்கையில், நிறைய வார்த்தைகள் இல்லாமல், மிகவும் குறைவான வார்த்தைகள் பயன்படுத்தி, அழகாக திருமண அழைப்பிதழ்களை அச்சடித்து வருகின்றனர்.

அப்படி இருந்தும், அதில் தவறு நிகழாமல் இருப்பது கிடையாது. அந்த வகையில் தான், மணப்பெண் ஒருவரும் தனது திருமண அழைப்பிதழில் உள்ள தவறு ஒன்றை சுட்டிக்காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பெண் வெளியிட்டுள்ள வீடியோவின் படி, அவரது திருமண பத்திரிக்கையில், வரவேற்பு நிகழ்ச்சி தொடர்பான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் கடைசி வரியில், எங்களுடைய திருமணத்தை குறித்து மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள இந்த இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில், உள்ள இணையதள முகவரி தான், தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

திருமண விவரங்களை தெரிந்து கொள்ளும் இணையதள முகவரி இடத்தில், ஒரு ஆபாச இணையதளத்தின் முகவரி தவறுதலாக இடம்பெற்றுள்ளது. முன்னதாக திருமண நாளிதழ் தயாராகும் சமயத்தில் இந்த தவறை அந்த பெண் கவனிக்கவில்லை என்றும், வேடிக்கையாக அந்த இடத்தில் ஆபாச இணையதள முகவரியை அதில் குறிப்பிட்டு பின் எடுக்க மறந்ததால், அச்சடிக்கும் போது அப்படியே இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இது தொடர்பாக பேசும் அந்த மணப்பெண், “இன்று தான் என்னுடைய கல்யாண பத்திரிக்கை எனக்கு கிடைத்தது. ஆரம்பத்தில் ஆர்வமாக தான் இருந்தேன். ஆனால் அதிலிருந்த ஒரு தவறை கண்டுபிடித்ததும் அதிர்ந்து போனேன்.

இது பொதுவான ஒரு தவறாக இருந்தாலும் நீங்கள் இந்த தவறை செய்யாமல் கவனமாக இருங்கள்” என அந்த பெண் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமில்லாமல், தனது தாயிடமும், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரிடமும் தன்னுடைய மன்னிப்பை கேட்டுக் கொள்வதாகவும் அந்த பெண் வெளியிட்டுள்ள வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் குறித்த தகவல் இருக்க வேண்டிய இணையதள முகவரி இடத்தில், தவறுதலாக ஆபாச இணையதள முகவரி இருந்தது பற்றி, நெட்டிசன்கள் பலரும் பல விதமான கருத்துக்களை குறிப்பிட்டு வருகின்றனர்.