திருவண்ணாமலை ரம்யா முதல் நாளில் சுதாகர், மறுநாள் சீனு ஊரையே உலுக்கிய சதி திட்டம்!!

201

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே மது அருந்திய சுதாகருக்கு அடுத்து நடக்க போகும் விஷயம் எதுவும் தெரியாது.

மனைவியின் நெருங்கிய தோழன் வாங்கி கொடுத்த அந்த மதுவை வாங்கி குடித்த பிறகு, ஊரையே அதிர வைத்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. அடுத்தடுத்து நண்பர்கள் இறந்து போனார்கள்.

உறவினர்கள் போராட்டம் மற்றும் அரசியல் கட்சியினர் நடத்திய போராட்டத்திற்கு பிறகு மனைவி சிக்கியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா கல்யாணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 42). இவரது மனைவி ரம்யா (30).

இதில் ரம்யாவிற்கும் ஆரணியை அடுத்த பையூர் கிராமத்தை சேர்ந்த 45 வயதாகும் பெருமாள் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியிருக்கிறது.

இதை ஒரு கட்டத்தில் கண்டுபிடித்த சுதாகர், தனது நண்பரான கோழிப்புலியூர் கிராமத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் சீனு வளவனிடம் தனது மனைவியின் தகாத உறவு குறித்து வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இதனால் சீனு வளவன், பெருமாளை சந்தித்து கள்ளக்காதலை கைவிடும்படி கூறியிருக்கிறார். ஆனால் அங்கு நடந்ததோ வேறு. நண்பனுக்காக பேசப்போன சீனுவளவனும் பெருமாளும் ஒரு கட்டத்தில் நண்பர்கள் ஆகிவிட்டனர்.


இதனையடுத்து பெருமாள் உடனான உறவை கைவிடும்படி ரம்யாவிடம், சுதாகர் பலமுறை வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் அதை ரம்யா கண்டுகொள்ள வில்லையாம்.

மேலும் தகாத உறவுக்கு இடையூறாக இருப்பதால் கணவரை கொலை செய்ய பெருமாளுடன் சேர்ந்து திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. இதற்கு சீனுவளவனை உதவிக்கு அழைத்தார்களாம்.

இதனையடுத்து சீனுவளவன், சம்பவத்தன்று சுதாகரை கோழிப்புலியூர் கூட்ரோட்டிற்கு அழைத்து சென்று மது குடிக்க வைத்திருக்கிறார். பின்னர் இருவரும் ஆரியூர் கிராமத்தில் உள்ள தேக்கு தோப்புக்கு சென்றுள்ளனர்.

அங்கு ரம்யா, பெருமாள் கொடுத்த அறிவுரைப்படி, மதுவில் விஷம் கலந்து சுதாகருக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.. பின்னர் ஆலியூர்-கல்யாணபுரம் இடையில் ஏரிக்கரை அருகில் உள்ள காரியமேடை பகுதியில் சுதாகரை விட்டு விட்டு சீனு வளவன் மட்டும் உடனடியாக அங்கிருந்து சென்றுவிட்டார்.

சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளியபடி சுதாகர் இறந்து கிடப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்துள்ளனர். அவர்கள் அவரது மனைவி ரம்யாவுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்று பார்த்த போது சுதாகர் இறந்து கிடந்ததை கண்டார்.

அதிகளவு மதுக்குடித்து இறந்திருக்கலாம் எனக்கருதிய உறவினர்கள் அவரது உடலை அடக்கம் செய்துவிட்டார்கள். இதனிடையே போலீசுக்கு தெரியவந்தால் நமக்கு என்ன ஆகுமோ என்று பயந்து சீனுவளவன் பெரணமல்லூர் செல்லும் சாலையில் டாஸ்மாக் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கினார்.

ஆனால் விசிக பிரமுகர் சீனுவளவன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கருதிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நண்பர்கள் அடுத்தடுத்து இறந்ததால் சந்தேகம் அடைந்த சுதாகரின் தம்பி வினோத்குமார் போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாசில்தார் முன்னிலையில் சுதாகரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில், சுதாகர் மதுவில் விஷம் கலந்து கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.

இதனையடுத்து ரம்யாவிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர் . விசாரணையில் தான் ரம்யாவிற்கும் பெருமாளுக்கும் கள்ளத் தொடர்பு இருந்தது சுதாகருக்கு தெரியவந்ததால், அவரது நண்பர் சீனுவளவன் மூலம் மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தது போலீசுக்கு தெரியவந்தது.

இதனையடுத்து ரம்யா, பெருமாள் ஆகியோரை போலீசார் கைது செய்து செய்யாறு நீதிமன்த் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலால் கணவன் மற்றும் அவரது நண்பனும் அடுத்தடுத்து இறந்த சம்பவம் சேத்துப்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.