தீபாவளி சீட்டில் நஷ்டம் : குடும்ப சண்டையில் கர்ப்பிணி மனைவி எடுத்த விபரீத முடிவு!!

81

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சாப்பரனப்பள்ளி கிராமத்தில் வசிப்பவர் கார்த்திக்குமார் (வயது 30). தினக்கூலி தொழிலாளியான இவர், திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. இவரது மனைவி உஷா (வயது 23).

இந்த தம்பதிக்கு ஜெய்வந்த் என்ற ஒன்றரை வயது மகன் உள்ளார். உஷா தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். கார்த்திக்குமார் தீபாவளி சீட்டு நடத்தி வந்தார். தீபாவளி சீட்டில் நஷ்டம் அடைந்ததாக தெரிகிறது.

கடந்த தீபாவளிக்கு சீட்டு எடுத்தவர்களுக்கு அவர் பொருட்களை வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, தீபாவளி சீட்டு கட்டியவர்கள் கார்த்திக்குமாரிடம் பணம் கேட்டு வந்துள்ளனர்.

இது தொடர்பாக, கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, தீபாவளி சீட்டுக்கு பணம் கேட்டு சிலர் கார்த்திக்குமாரின் வீட்டிற்கு வந்தனர்.

இதனால், நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த உஷா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

தகவல் கிடைத்ததும், போலீசார் உஷாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


உஷாவுக்கு திருமணமாகி இரண்டரை வருடங்களே ஆவதால், ஓசூர் உதவி கலெக்டர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.