தமிழ் சினிமாவில் தற்போது வரை சிறந்த துணை நடிகர் துணை நடிகை என்றால், நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தான். இவர்களது மகள் வனிதா, இவரின் முதல் படமே விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் நடித்தார். அந்த படத்தில் ஒரு உதட்டு முதகாட்சினிருப்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
கால ஓட்டத்தில், நடிகை வனிதா பிரபல நடிகரான ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் உள்ளனர். இதில் ஸ்ரீஹரியை கொத்தாக வனிதாவிடம் இருந்து ஆகாஷ் கொண்டு சென்றார். பிறகு இருவரும் விவாகரத்து பெற்றனர். சில வருடங்கள் கழித்து வனிதா 2007 ஆம் ஆண்டு ராஜன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மகள் உள்ள நிலையில் இருவரும் பிரிந்தனர்.
வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் குறித்து பல பிரபலங்கள் வாய்கொடுத்து மாட்டிக்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், யூடியூப் புகழ் சூர்யாதேவி என்னும் பெண்மணி வனிதாவைப்பற்றி கன்னா பின்னா என்று பேசியுள்ளார். அப்படி பேசியதற்கு மக்களிடையே சிலர் ஆதரவாகவும், பலர் “அதெல்லாம் உனக்கு எதுக்கு?” என்று அவருடைய வீடியோவுக்கு பதிலளித்தனர்.
இந்த நிலையில், சூர்யா தேவி பேசி வெளியிட்ட வீடியோவில் “வப்பாட்டி வனிதா” என்று பேசி வீடியோவை பதிவு செய்தார். இந்த வீடியோ தமிழகம் முழுவதும் பட்டிதொட்டி எங்கும் எதிரொலித்தது. இது தொடர்பாக நடிகை வனிதா சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் படி, வடபழனி போலீசார், சூர்யா தேவியை நேற்று மாலை 6 மணிக்கே அவரது வீட்டிலிருந்து போலீசார் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.