நடுக்கடலில் படகு கவிழ்ந்து குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழப்பு.. பலர் மாயம்!!

371

காங்கோ நாட்டில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கின்ஷாசாவின் தலைநகரின் வடகிழக்கில் உள்ள இனோங்கோ நகரத்தில் இருந்து புறப்பட்ட கப்பலில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

ஆறுகளால் சூழப்பட்ட, கப்பல் போக்குவரத்தை பெரிதும் நம்பியிருக்கும் மத்திய காங்கோவில் ஒரு ஆற்றில் நெரிசல் மிகுந்த படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளனாதில் குழந்தைகள் உட்பட குறைந்தது 25 பேர் உயிரிழந்தனர் என்றும் 12க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கின்ஷாசாவின் தலைநகரின் வடகிழக்கில் உள்ள இனோங்கோ நகரத்திலிருந்து புறப்பட்ட கப்பலில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. ஃபிமி ஆற்றின் வழியே பயணம் செய்துக் கொண்டிருந்த போது ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்றும், காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


“படகில் அதிகளவிலான நபர்கள் ஏற்றப்பட்டிருந்ததே கவிழ்ந்து விபத்திற்குள்ளானதுக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது. இதுவரை சடலமாக 25 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

12க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருக்கும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும்” என்று இனோங்கோவின் நதி ஆணையர் டேவிட் கலெம்பா கூறினார்.

கவிழ்ந்த படகில் பொருட்கள் ஏற்றப்பட்டிருந்ததாக அப்பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் ம்பும்பா தெரிவித்தார். “இறந்தவர்களில் குழந்தைகளும் இருந்தனர். படகில் நிறைய பயணிகள் இருந்தனர்,”

என்று உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். காங்கோ அதிகாரிகள் அடிக்கடி அதிக சுமைகளை ஏற்றுவதற்கு எதிராக எச்சரித்து வந்துள்ளனர். நீர் போக்குவரத்துக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறுபவர்களை தண்டிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

அக்டோபரில் நாட்டின் கிழக்கில் அதிக சுமை ஏற்றப்பட்ட படகு மூழ்கியதில் குறைந்தது 78 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததும்,

ஜூன் மாதம் கின்ஷாசா அருகே இதேபோன்ற விபத்தில் 80 பேர் உயிரிழந்ததும் இந்த வருடத்தில் காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளான நான்காவது சம்பவம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.