நண்பரைக் கட்டிப்பிடித்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட நபர்!

354

நியூசிலாந்தில் தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறிய நபர் ஒருவருக்கு ஆறு வார சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

33 வயதுடைய ஜெஸ்ஸி கோர்ட்னி வெல்ஷ் என்ற நபரே கட்டிபித்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில், அவுஸ்திரேலியாவிலிருந்து திரும்பிய பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட நண்பர் ஒருவரை பார்க்க ஜெஸ்ஸி கோர்ட்னி வெல்ஷ் ஆக்லாந்தில் உள்ள தனிமைப்படுத்தும் நிலையத்திற்குச் சென்றுள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்திற்குச் சென்றதே விதி மீறலாக இருந்தது, ஆனால் பின்னர் வெல்ஷ், தனது நண்பரைக் கட்டிப்பிடிப்பதன் மூலம் இந்த விஷயத்தை பெரியதாக்கினார்.


வழக்கு விசாரணையின் போது தனிமைப்படுத்தப்பட்ட விதிகளைப் பற்றி நன்கு அறிந்திருப்பீர்கள், தனிமைப்படுத்தப்பட்டிருந்த நண்பருடன் பேசியது மட்டுமில்லாமல் அவரை கட்டிப்பிடித்துள்ளீர்கள் என்று நீதிபதி கூறினார்.

வெல்ஷின் வழக்கறிஞர் தனது கட்சிக்காரர் தனது செயல்களுக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டதாகவும், உண்மையில் இது முட்டாள்தனமாக செயல் என்று ஒப்புக்கொண்டதாக கூறினார்.

கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள் மற்றும் முன்கூட்டியே ஊரடங்கு விதிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாட்டில் வைரஸை கிட்டத்தட்ட அகற்றிய பெருமை நியூசிலாந்திற்கு இருந்தது.

எவ்வாறாயினும், இந்த மாத தொடக்கத்தில் நாடு புதிய நோய்த்தொற்று பரவலை அடையாளம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.