அமெரிக்காவில்..
அமெரிக்காவின் லூசியானாவை சேர்ந்த ‘ஷோயி’ என்ற லாப்ரடோர் – ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்,தன் நாக்கால் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. 12.7 சென்றி மீற்றர் நீளம் (5 அங்குலம்) கொண்ட நீளமான நாக்கை இந்த ஷோயி கொண்டுள்ளது.
இதனை கால்நடை மருத்துவர் அளந்து பார்த்ததன் பின்னரே கின்னஸ் சாதனைக்கு பரிந்துரைத்தார். சாதனை தொடர்பில் ஷோயின் உரிமையாளர்களான சாடியும் ட்ரூவும் கூறுகையில்,
“ஷோயி’ 6 வாரமாக இருக்கும் போது அதனை வாங்கினோம். அது குட்டியாக இருக்கும் போதே ஷோயின் நாக்கு வாயில் இருந்து அடிக்கடி வெளியேறும்.
அது நீளமாக வளரும் என நாம் நினைத்த நிலையில் இப்போது சாதனை படைத்துள்ளது என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
Zoey loves to fetch and swim. Coincidentally, she has the world’s longest tongue on a dog!https://t.co/2jvoSbvga9
— Guinness World Records (@GWR) June 2, 2023