செக் குடியரசு நாட்டில்..
செக் குடியரசு நாட்டின் பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளராக கமில் பார்டோஷேக்(Kamil Bartoshek) தான் நடத்தும் போட்டி ஒன்றில் வெற்றி பெறுபவருக்கு மிகப்பெரிய தொகையை பரிசாக வழங்க தயாராக இருப்பதாக வாக்குறுதி அளித்து இருந்தார்.
இதற்காக போட்டியாளர்கள் கஸ்மாவின் திரைப்படமான ‘ஒன் மேன் ஷோ: தி மூவி’-யில் உள்ள puzzle குறியீட்டை கண்டுபிடிக்க வேண்டியது இருந்தது. ஆனால் இறுதி வரை போட்டியாளர்கள் யாரும் puzzle-யை தீர்க்க முடியாததை தொடர்ந்து,போட்டியாளர்கள் அனைவருக்கும் பரிசு தொகையை பிரித்து வழங்க போட்டி தொகுப்பாளர் முடிவு செய்துள்ளார்.
இறுதியில் $1 மில்லியன் பரிசு தொகையை லைசா நாட் லேபெம் நகருக்கு அருகே ஹெலிகாப்டரில் இருந்து மழைபோல் பொழிய தீர்மானித்தார்.இது தொடர்பான மறைமுகமான தகவல் ஒன்றையும் போட்டியாளர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தார்.
இதையடுத்து கொடுத்த வாக்குறுதி படி, குறிப்பிட்ட நேரத்தில் லைசா நாட் லேபெம் நகருக்கு அருகே ஹெலிகாப்டரில் இருந்து சுமார் $1 மில்லியன் பரிசு தொகையை பண மழையாக கொட்டினார். இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.
#Czech millionaire blogger Kamil Bartoshek dropped $1 million from a helicopter. pic.twitter.com/Xnlyfz41zQ
— Oo ps (@ps_trump) October 26, 2023