நாட்டை உலுக்கிய கொலை வழக்கில் சுவிஸ் பொலிஸ் அதிகாரிக்கு தொடர்பு? வெளியான பின்னணி!!

367

சுவிஸ் வரலாற்றில் மிக மோசமான கொலை வழக்கு தொடர்பில், குற்றவாளிக்கு உதவியதாக கூறப்பட்ட புகாரில் பொலிஸ் அதிகாரி ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்து வரலாற்றில் மிக மோசமான சம்பவமாக பார்க்கப்பட்டு வருகிறது 2015-ல் Rupperswil பகுதியில் நடந்த நான்கு கொலை மற்றும் குடியிருப்புக்கு நெருப்பு வைத்த விவகாரம்.

இந்த வழக்கு விசாரணையை திசை திருப்ப அல்லது முடக்க, ஆர்காவ் மண்டல பொலிஸ் அதிகாரி ஒருவர் முயன்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மீது வழக்கும் பதியப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

மண்டல காவல்துறையில் சுமார் 40 ஆண்டு காலம் பணியாற்றிய அந்த 64 வயதான நபர், மாவட்ட நீதிமன்றத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.


இந்த வழக்கில் குறித்த பொலிஸ் அதிகாரிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாத நிலையில், அவர் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2015 டிசம்பர் 21 ஆம் திகதி கர்லா என்பவரின் குடியிருப்புக்குள் நுழைந்த 33 வயதான தாமஸ், கர்லாவின் 13 வயது மகன் டேவினை கொன்று விடுவதாக மிரட்டி இன்னொரு மகனான டியான் (19) மற்றும் அவரது காதலி சிமோனா (21) ஆகியோரை பிணைக்கைதியாக்கியுள்ளார்.

பின்னர் கர்லாவை மிரட்டி, வங்கியில் இருந்து பணம் எடுத்துவர அனுப்பி வைத்துள்ளார் தாமஸ்.

கர்லா பணத்துடன் திரும்பிய நிலையில் ஒருவர் பின் ஒருவராக நால்வரின் கழுத்தையும் கத்தியால் கிழித்து கொலை செய்துவிட்டு, குடியிருப்புக்கும் நெருப்பு வைத்துவிட்டு, அங்கிருந்து தப்பியுள்ளார்.

சுமார் 5 மாத காலம் நீண்ட விசாரணைக்கு முடிவில் தாமஸ் கைது செய்யப்பட்டடு தற்போது சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.