கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள கவேனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் நவீன் (25). இவரும், ஹாசன் பேளூரை சேர்ந்த தேஜஸ்வினி என்ற 21 வயது பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.
இதை அறியாத பெண்ணின் குடும்பத்தினர் தேஜஸ்வினிக்கு சிவமொக்காவை சேர்ந்த பிரமோத் குமார் என்பவருடன் திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். பெற்றோருக்கு பயந்த தேஜஸ்வினி காதலை மறைத்து திருமணத்திற்கு சம்மதித்தார்.
இந்நிலையில், பேலூரு உள்ள ஒக்கலிகர் பவனில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அப்போது, மணமகன் தாலி கட்டிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த காதலன் நவீன், திடீரென தாலியை பறித்து, ‘ இந்த பெண் என்னை காதலிக்கிறாள்.
அவளை எனக்கு திருமணம் செய்து வையுங்கள்” என்று கூறினர். இதனால் திருமண மண்டபத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதனால் பெண்ணின் குடும்பத்தினர் பேலூரு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் பேலூரு போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது மணமகள், நவீனை யாரென்று தெரியவில்லை. மணமகன் காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தவுடன்,
மணமகன் பிரமோத்குமார், ‘‘இந்தத் திருமணம் தேவையில்லை’’ என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். பின்னர் நவீன் மற்றும் மணமகள் தேஜஸ்வினியை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தது தெரியவந்தது. போலீஸ் ஸ்டேஷனில், இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களையும், பெண் அனுப்பிய குறுஞ்செய்திகளையும் நவீன் காட்டினார்.
நேற்று இரவு குறுஞ்செய்தியில், “எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. என்னால் திருமணத்தை நிறுத்த முடியாது. நீ எப்படியாவது வந்து இந்தக் கல்யாணத்தை நிறுத்து” என்று தேஜஸ்வினி குறுஞ்செய்தி அனுப்பினாள்.
இதையடுத்து இருவரது பெற்றோரையும் அழைத்து போலீசார் திருமணம் செய்து வைக்க அறிவுறுத்தினர். இதையடுத்து இரு வீட்டாரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.