நீதிமன்றத்தில் வழக்கறிஞரை வெட்டிய தம்பதி சிறையில் அடைப்பு!!

84

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஏரித்தெரு பகுதியில் வசித்து வருபவர் கண்ணன். இவருக்கு வயது 28. இவர் ஓசூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார்.

இவரை சகவழக்கறிஞர் ஆனந்தன் பின் தொடர்ந்து அரிவாளால் பலமாக பல்வேறு இடங்களில் வெட்டி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த கண்ணன், சாலையிலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

அவரை உடனடியாக அக்கம்பக்கத்தினர் மற்றும் சக வழக்கறிஞர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவத்தில் ஆனந்தன் சத்யாவதி தம்பதியினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வழக்கறிஞரை வெட்டி ஆனந்தன் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய மனைவியையும் கைது செய்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.