படம் பார்ப்பதற்காக தீவில் தனிமையாக விடப்பட்ட பெ ண்! கொ ரோ னா வார்டு செவிலியருக்கு அடித்த அதிர்ஷ்டம்!!

396

சுவீடன் நாட்டில்…

இயற்கைக் காட்சிகளுக்கு மத்தியில் த னி மைப்படுத்தப்பட்ட தீவில் அனைத்து வசதிகளுடன் ஒட்டுமொத்த திரைப்பட விழாவையும் ஒரே ஆளாக பார்ப்பதற்கான அதிர்ஷ்ட டிக்கட்டை ஒரு சுவீடன் செவிலியர் வென்றுள்ளார்.

சுவீடன் நாட்டில் Goteborg திரைப்பட விழா நடத்தப்படுகிறது. இதன் ஓரு பகுதியாக ஜனவரி 30 முதல் பிப்ரவரி 8-ஆம் திகதி வரை திரைப்பட விழாவில் இடம்பெறும் 60 திரைப்படங்களையும், ஒரு ரசிகர் சிறப்பு வசதிகளுடன் பார்ப்பதற்கான ஒரு போட்டி நடத்தப்பட்டது.

அதற்கு சுமார் 12,000 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக அந்த சிறப்பு டிக்கெட், கடந்த ஓராண்டு காலமாக கொ.ரோ.னா தீ.வி.ர சி.கி.ச்.சை வா ர் டில் பணியாற்றிவந்த Lisa Enroth எனும் செவிலியருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த டிக்கெட்டின் சிறப்பு அம்சம் என்னவென்றால், வெற்றி பெற்ற நபர் ஒரு த னி மை ப்படுத்தப்பட்ட தீவில் ஒரு கலங்கரை விளக்கத்தின் மேல் உள்ள பாதுகாப்பான கண்ணாடி அறையில் உட்கார்ந்து அழகான இயற்கைக்காட்சிகளுக்கு மத்தியில் திரை அமைக்கப்பட்டு 60 படங்களை பார்க்கலாம்.


இதற்கு மொத்தம் 7 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதுவரை தேவைப்படும் உணவுகள் உள்ளிட்ட மற்ற வசதிகளும் இராஜபோகமாக செ ய் து தரப்படும்.

இந்த சிறிய தீவில், வெற்றி பெற்றவரின் பா து கா ப் பு காரணங்களுக்காக ஒருவர் மட்டும் நியமிக்கப்படுவார்.

இந்த சிறப்பு டிக்கெட் மிகுந்த தகுதியுடைய ஒருவருக்கு தான் கொடுக்கப்பட்டுள்ளது என திரைப்பட விழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.