பாடசாலையில் இருந்து அழுது கொண்டே வீட்டுக்கு வந்து சுருண்டு விழுந்து உயிரிழந்த 15 வயது மாணவி!!

411

இந்தியாவில்..

இந்தியாவில் பள்ளி கட்டணம் செலுத்தாததால் அ.வமானப்படுத்தப்பட்ட 15 வயதான மாணவி வீட்டுக்கு வந்த போது கீழே சுருண்டு விழுந்து உ.யிரிழந்த சம்பவம் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் உன்னவ் மாவட்டத்தை சேர்ந்த 15 வயதான சிறுமி சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளிக்கூடத்தில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று பள்ளி முடிந்து வீட்டுக்கு அழுது கொண்டே வந்த அவர் திடீரென வீட்டில் சுருண்டு விழுந்தார்.

இதை பார்த்த குடும்பத்தார் பதறிய நிலையில் மாணவியை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இ.றந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக மாணவியின் குடும்பத்தார் ஒரு அ.திர்ச்சி பு.காரை பொலிசில் அளித்துள்ளனர்.


மாணவியின் பெற்றோர் கூறுகையில், பள்ளி கட்டணம் செலுத்தாததால் எங்கள் மகள் கட்டண சலுகைக்கான கோரிக்கையை கேட்க பாடசாலை அதிபரிடம் சென்றுள்ளார்.

அங்கு எல்லா மாணவ, மாணவிகள் முன்னிலையும், எங்கள் மகளை ஏன் பள்ளி கட்டணம் செலுத்தவில்லை என கூறி அவர் அவமானப்படுத்தியுள்ளார்.

பின்னர் வீட்டுக்கு வந்த மகள், என்னை எல்லார் முன்னிலையிலும் அசிங்கப்படுத்திவிட்டார்கள் என அழுதவாறு இருந்த போது கீழே திடீரென சு.ருண்டு வி.ழுந்துவிட்டாள் என தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.