பாலியல் பலாத்காரத்தால் 11 வயது சிறுமி கர்ப்பம்.. 30 வார கருவை கலைக்க நீதிமன்றம் உத்தரவு!!

167

20 வாரங்களுக்கு மேல் கருவை கலைக்க பெண்கள் நீதிமன்ற அனுமதி பெறுவது கட்டாயம். பெண்ணின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் 20 வாரங்களுக்கு மேல் கருவை நீதிமன்றம் அனுமதி மறுத்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 11 வயது சிறுமியின் தந்தை, 30 வார கருவை கலைக்க அனுமதி கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் ஷர்மிளா தேஷ்முக், ஜிதேந்திர ஜெயின் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், “பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர் மைனர் பெண்.

எனவே, கருவை கலைக்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஒருவேளை, சிறுமியின் வயிற்றில் வளரும் குழந்தை உயிருடன் பிறந்தால், மருத்துவமனை நிர்வாகம் காப்பாற்ற வேண்டும்.

அந்த குழந்தையை வளர்க்க பெற்றோர்கள் விரும்பவில்லை என்றால், அந்த குழந்தைக்கு மாநில அரசு தான் பொறுப்பு” என்றார். சிறுமி மீதான பாலியல் வழக்கு விசாரணைக்காக அவரது ரத்தம் மற்றும் சதை மாதிரிகளை சேகரிக்கவும் உத்தரவிட்டனர்.