பிக்பாஸ் ஆர்த்தியின் புது காதலர்! திருமணம் இவரோடு தானாம் – போட்டோவை வெளியிட்ட காமெடி நடிகை!

1109

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ஆர்த்தி. இந்நிகழ்ச்சிக்கு வரும் முன்பே ஆர்த்தி காமெடி நடிகையாக சினிமாவை கலக்கியவர்.

பிக்பாஸ் அவரின் ரசிகர்கள் வட்டாரத்தை அதிகப்படுத்தியது எனலாம். கொரோனாவால் சினிமா வட்டாரமே வேலையை இழந்தது. இந்நிலையில் ஆர்த்தி அடுத்த ஒருவருடத்திற்கு தனக்கு ரூ 1 சம்பளம் கொடுத்தால் போதும்.

மேலும் தனக்கென சம்பளம் நியமிக்கப்பட்டிருக்கும் தொகையில் நாட்டுப்புறக்கலைஞர்களுக்கு படத்தில் வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என கண்டிசனும் போட்டார். அண்மையில் ஃபேஸ் அப் செயலி மூலம் ஆண்கள் தங்களை பெண் போலவும், பெண்கள் தங்களை ஆண்கள் போலவும் சித்தரித்து போட்டோவை வெளியிட்டு வருகின்றனர்.


இந்நிலையில் ஆர்த்தியும் அது போல செய்து என் புது காதலர் இவர் தான். இவரை தான் திருமணம் செய்யப்போகிறேன் எனவும், கணவர் கணேசிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

வேடிக்கையான இந்த பதிவை பலரும் ரசித்துள்ளனர்.