பிரசவத்துக்கு 2 நாள் முன்ன தான் கர்ப்பம்ன்னே தெரியும்… ஷாக் கொடுத்த இளம்பெண்!!

907

அமெரிக்கா..

அமெரிக்காவின் Nebraska என்னும் பகுதியை சேர்ந்தவர் பெய்டன் ஸ்டோவர் (Peyton Stover). இளம்பெண்ணான இவர், பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி இருக்கையில், பெய்டனுக்கு சமீப காலமாகவே அடிக்கடி உடல் சோர்வு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

தனது பணியின் காரணத்தினால் அப்படி நிகழ்ந்திருக்கும் என்றும் பெய்டன் ஆரம்பத்தில் கருதி உள்ளார். இதனைத் தொடர்ந்து பெய்டனின் காலும் வீங்க ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. இதனால், உடல் சோர்வு மற்றும் கால் வீக்கம் காரணமாக மருத்துவரை அணுகவும் பெய்டன் மற்றும் அவரது பார்ட்னரான ட்ராவிஸ் ஆகியோர் முடிவு செய்துள்ளனர்.


அங்கு கொஞ்சம் கூட நம்ப முடியாத தகவல் ஒன்று அவர்களுக்கு கிடைத்துள்ளது. அதாவது, பெய்டன் கருவுற்றிக்கிறார் என்பது தான் அது. ஆரம்பத்தில் இதனை அறிந்து மருத்துவர்களும் அதிர்ச்சி அடைந்த நிலையில், மீண்டும் ஒரு முறை அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போதும் பெய்டன் கர்ப்பமாக தான் இருக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது.

இதனை அறிந்து கொண்ட ட்ராவிஸ் – பெய்டன் ஜோடி, ஒரு பக்கம் மகிழ்ச்சியில் உறைந்தாலும் மறுபக்கம் இத்தனை நாட்கள் இது தெரியாமல் போனதை எண்ணி விரக்தியும் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

தொடர்ந்து, மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் உயர் ரத்த அழுத்தம் காரணமாக, இதற்கு மேலும் அவரது உடல்நிலை குழந்தையை தாக்குவதற்கு ஏற்றதாக இருக்காது என்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதன் பின்னர், அறுவை சிகிச்சை செய்து பத்திரமாக குழந்தையை வெளியேவும் மருத்துவர்கள் எடுத்தனர். மேலும், குறிப்பிட்ட தேதிக்கு 10 வாரங்கள் முன்பே குழந்தையை பெய்டன் பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், Pre Eclampsia என்ற பிரசவத்துக்கு முந்தைய பாதிப்பு இருந்ததால் அதற்கான சிகிச்சையும் பெய்டனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தாங்கள் ஒரு நாள் குழந்தை வேண்டும் என விரும்பியதாகவும், ஆனால் அதற்குள் குழந்தை கிடைத்தது என்றும் மகிழ்ச்சியுடன் பெய்டன் – ட்ராவிஸ் தம்பதியினர் குறிப்பிடுகின்றனர்.