பிரபல ஐடி நிறுவன பெண் ஊழியர் எடுத்த விபரீத முடிவு… போலீசிடம் சிக்கிய கடிதம்!!

212

பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்த இளம்பெண் விடுதியின் 5 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் ஏராளமான ஐ.டி.நிறுவனங்கள் உள்ளன. அந்த ஐடி நிறுவனங்களில் அண்டை மாநிலங்களில் இருந்தும் பலரும் வேலை செய்து வருகின்றனா். அவ்வாறு வருபவர்கள் பிஜி எனப்படும் தங்கும் விடுதிகளில் தங்கி பணி செய்து வருகின்றனா்.

இதற்கிடையே மனஉளைச்சல், காதல் தோல்வி உள்பட பல்வேறு காரணங்களுக்காக தங்கும் விடுதிகளில் இளம்பெண் தற்கொலை செய்து வரும் சம்பவங்கள் அதிகாித்துள்ளது. தற்போது இதேபோல் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் கடபாவை சேர்ந்த தம்பதியின் மகள் கௌதமி (வயது23).

இவர் பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டியில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதற்காக அந்த பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் வாடகைக்கு அறை எடுத்து கௌதமி தங்கி இருந்தார்.

கடந்த சில நாட்களாக கௌதமி, பணிக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் விடுதியிலேயே இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று கௌதமி தனது அறையில் இருந்தார். அப்போது அவர் விடுதியின் 5 வது மாடிக்கு சென்றார்.

மேலும் 5வது மாடியில் இருந்து திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவ்வளவு உயரத்தில் இருந்து குதித்த நிலையில், ரத்த வெள்ளத்தில் கௌதமி சம்பவ இடத்லேயே உயிரிழந்தார். இதைக்கண்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனா்.


மேலும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக ஒயிட்பீல்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனா். அந்த தகவலின்பேரில் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் கௌதமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனா்.

பின்னர் கௌதமி தங்கி இருந்த அறையை போலீசார் சோதனை செய்தனா். அப்போது அவரது அறையில் கடிதம் ஒன் சிக்கி இருந்தது. அந்த கடிதத்தில்,” எனது சாவுக்கு நானே காரணம். எனது உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம்.

எனது உடலை எனது பெற்றோரிடம் ஒப்படைத்துவிடுங்கள்” என கூறப்பட்டு இருந்தார். அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தினா். அப்போது அவரது தற்கொலைக்கான காரணம் முதலில் தெரியவில்லை.

அந்த பகுதியில் உள்ள ஐடிநிறுவனத்தில் அவர் வேலை செய்த நிலையில், குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்பட்டது. இதுதொடர்பாக கௌதமிக்கு தெரிந்தவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும் அவரது செல்போனையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். ஐடி பெண் ஊழியா் விடுதியின் 5 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.