பிரான்சில் பயங்கரம்! கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து: 6 சிறுவர்கள் உட்பட 10 பேர் காயம் என தகவல்!!

370

பிரான்சில் வீதி விபத்து ஒன்றில் ஆறு சிறுவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்சில் Pézenas (Hérault) நகரில் கடந்த சனிக்கிழமை பந்த பயங்கர விபத்து நடைபெற்றுள்ளது.

இந்நகரை ஊடறுக்கும் RD13 நெடுஞ்சாலையில் பயணித்த இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்தை ஏற்படுத்தின.

உடனடியாக இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்டதால், சம்பவ இடத்திற்கு தீயணைப்பு மற்றும் பொலிசார் வந்துள்ளனர்.


அதன் பின் காரில் சிக்கி காயமடைந்திருந்த 10 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதில் 6 பேர் சிறுவர்கள் எனவும், இவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

மேலும் விபத்தில் சிக்கியவர்கள் பற்றி எந்த ஒரு முழு விபரத்தையும் பொலிசார் வெளியிட வில்லை.