பிரான்ஸில் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றின் கூரையில் வாகனம் ஒன்று சிக்கிக்கொண்டுள்ள புகைப்படம் இணையத்தில் பரவி வருகின்றது.
இச்சம்பவம் Valmy-Le Moulin நகரில் நேற்று இடம்பெற்றுள்ளது.
A4 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுத்திகரிப்பு நிலையத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது ஒரு ‘நம்பமுடியாத’ விபத்து என பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் இந்த விபத்தில் எவரும் காயமடையவில்லை என்பதுடன் பலவகை பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.