பிரித்தானியாவில் கடலில் சிக்கிய 10 வயது சிறுவன்: பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி போன்று நடந்த சம்பவம்!!

755

பிரித்தானியாவில் கடலில் சிக்கிய 10 வயது சிறுவன், முன்னர் தாம் பார்த்து தெரிந்து கொண்ட பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியால் உயிர் தப்பியதாக தெரிவித்துள்ளான்.

வடக்கு யார்க்ஷயரில் உள்ள ஸ்கார்பாரோ பகுதியின் கடற்கரையில் தமது தந்தை நாதுராமுடன் 10 வயது ரவீராஜ் சைனி நீச்சலடித்து விளையாடிக்கொண்டிருந்துள்ளான்.

இந்த நிலையில் ரவீராஜ் சைனி தவறுதலாக கடலின் ஆழத்துக்கு செல்லவே, நீச்சல் தெரியாத அவரது தந்தையால் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

ஆனால் பீதியில் தத்தளிப்பதற்குப் பதிலாக, சிறுவன் ரவீராஜ் அமைதியாக கடலில் மிதந்துள்ளான்.


இதனிடையே தந்தை நாதுராம் கடலோர மீட்புக்குழுவினரின் உதவியை நாட, அவர்கள் இரவு 8 மணியளவில் வின்சென்ட் பியர் அருகே சிறுவன் ரவீராஜை மீட்டுள்ளனர்.

தொலைக்காட்சியில் கடலில் சிக்கினால் தப்புவது எப்படி என்ற நிகழ்ச்சியே தம்மை காப்பாற்றியதாக கூறும் ரவீராஜ்,

நம்பிக்கையை கைவிடாமல் முயன்றால் எந்த சிக்கலில் இருந்தும் தப்பலாம் என தெரிவித்துள்ளான்.