பிரித்தானியாவில் கொடூர தாக்குதலை முன்னெடுத்த கொலையாளியின் புகைப்படம் வெளியானது!

451

பிரித்தானியாவின் ரீடிங் நகரில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் நேற்று கொடூர தாக்குதலை முன்னெடுத்த நபரின் முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது.

குறித்த கண்மூடித்தனமான தாக்குதலில் மூவர் கொல்லப்பட்ட நிலையில், சிறிய வன்முறை தொடர்பான குற்றங்களுக்காக அந்த நபர் மீது பதிவாகியுள்ள முந்தைய குற்றச்சாட்டுகளும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

லிபியா நாட்டவரான 25 வயது Khairi Saadallah என்பவரே சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி 7 மணி கடந்த நிலையில் இந்த தாக்குதலை முன்னெடுத்தவர்.

தாக்குதலைத் தொடர்ந்து மூன்று பேர் இறந்தனர், மேலும் மூன்று பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இருப்பினும் இரண்டு பேர் சிகிச்சைக்கு பின்னர் வெளியேறியுள்ளனர்.


சம்பவயிடத்தில் குறித்த இளைஞரை தடுத்து வைக்கப்பட்டு பின்னர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார், இந்த சம்பவம் பயங்கரவாத செயல் என விசாரிக்கப்பட்டு வருவதாக Thames Valley பொலிசார் இன்று காலை தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பான சாத்தியமான நோக்கம் பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை, ஆனால் உளவியல் பாதிப்பு ஒரு முக்கிய காரணியாக கருதப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

சதாலாவின் குற்றவியல் பின்னணி:

சதாலா முதன்முதலில் புகலிடம் கோருவதற்கு முன்பு 2012 ஆம் ஆண்டில் சுற்றுலாப்பயணியாக பிரித்தானியா வந்துள்ளார்.

சதாலா ஏற்கனவே சிறிய குற்றச்செயல்களில் ஈடுபட்டு 12 மாதங்கள் வரை சிறை தண்டனையும் அனுபவித்துள்ளதாக பத்திரிகைகள் சுட்டிக்காட்டியுள்ளன.

சதாலா இதுவரை தேசிய நன்னடத்தை சேவையின் மேற்பார்வையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மட்டுமின்றி, இதே பெயர் மற்றும் முகவரியுடன் கூடிய நபர் மீது சில வழக்குகள் இருப்பதாக நீதிமன்ற அறிக்கைகளில் இருந்தும் தெரியவந்துள்ளது.

இருப்பினும், முந்தைய குற்றச்செயல்கள் எதுவும், பயங்கரவாதம் தொடர்புடையதாக இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில், முந்தைய இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்காக ரீடிங் நகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒரு நீதிபதியைத் தாக்கியதாகக் கூறி, இவர் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரானார் என்பதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இதே பெயருடைய நபர் அவசர சேவை ஊழியரை தாக்கியதாக கூறி இரண்டு மாதம் சிறை தண்டனை அனுபவித்துள்ளார், 115 பவுண்டுகள் பிழையும் விதிக்கப்பட்டுள்ளது.

சதாலா போதை மருந்து விற்பனையும் செய்து வந்துள்ளார். மட்டுமின்றி இவரிடம் வாடிக்கையாளரான 26 வயது இளைஞர் ஒருவர் இதை உள்ளூர் பத்திரிகை ஒன்றிடம் வெளிப்படுத்தியுள்ளார்.உண்மையில் சதாலா மிகவும் அப்பாவியாகவும், சாதாரண குணங்களை கொண்ட இளைஞராகவே அக்கம்பக்கத்தினருக்கு அறிமுகமாகியுள்ளார்.