பிரித்தானியாவில் பயங்கர சம்பவம்! பலர் மீது சரமாரி கத்திக்குத்து தாக்குதல்: பொலிஸ் வெளியிட்ட முக்கிய தகவல்!!

348

பிரித்தானியா……

பிரித்தானியாவின் பர்மிங்காம் நகர மையத்தில் பயங்கர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர். நகர மையத்தில் பலர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிசார் உறுதிசெய்துள்ளனர்.

சம்பவம் குறித்து மேற்கு மிட்லாண்ட்ஸ் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று செப்டம்பர் 6 ஞாயிற்றுக்கிழமை சுமார் 12:30 மணியளவில் பர்மிங்காம் நகர மையத்தில் கத்திக்குத்து தாக்குதல் தொடர்பில் எங்களுக்கு அழைப்பு வந்தது.

ஆம்புலன்ஸ் சேவையைச் சேர்ந்த சக ஊழியர்களுடன் நாங்கள் உடனடியாக சம்பவியடத்திற்கு விரைந்தோம். சிறிது நேரத்தில் இந்த பகுதியில் பல கத்திக்குத்து தாக்குதல்கள் இடம்பெற்றன.

இத்தாக்குதலில் பலர் காயமடைந்தள்ளனர். ஆனால் தற்போது எத்தனை பேர் அல்லது எவ்வளவு தீவிரமான காயம் என்று விளக்கக்கூடிய நிலையில் நாங்கள் இல்லை.


இருப்பினும், அனைத்து அவசர சேவைகளும் சம்பவ இடத்தில் ஒன்றாக பணியாற்றி வருகின்றன, மேலும் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ வசதி கிடைப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது ஒரு பயங்கர சம்பவமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ன நடந்தது என்பதை கண்டறிவதற்கான பணிகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன, மேலும் எதையும் உறுதிப்படுத்த சிறிது நேரம் ஆகலாம்.

இந்த ஆரம்ப கட்ட விசாரணையில் சம்பவத்தின் காரணங்களை ஊகிப்பது பொருத்தமானதல்ல.

நகர மையப்பகுதி பொலிசார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளன, மேலும் சில சாலை மூடப்பட்டுள்ளன.

மக்களின் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமை. மக்கள் அமைதியாக இருக்கவும், ஆனால் விழிப்புடன் இருக்கவும் அப்பகுதியிலிருந்து விலகி இருக்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் மேற்கு மிட்லாண்ட்ஸ் பொலிஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது.