ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை என்ற இடம் அமைந்துள்ளது. இங்க மணிகண்டன் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவியின் பெயர் புவனேஸ்வரி. இந்த மாதம் 8-ஆம் தேதியன்று அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் புவனேஸ்வரி ஒரு பெண்குழந்தையை பெற்றெடுத்தார்.
குழந்தை பிறந்த உடனே கால்களில் மிகப்பெரிய ரத்தநாள கட்டி இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குழந்தையை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதித்தனர். குழந்தையின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து தான் கட்டியை அகற்ற இயலும் என்று முடிவெடுத்தனர்.
அதன்படி அறுவை சிகிச்சை தொடர்பான ஒவ்வொரு துறையின் மூத்த மருத்துவருடன் ஒரு குழு உருவானது. அந்த மருத்துவர்கள் 3 மணி நேரமாக போராடி அந்த ரத்தநாள கட்டியை அகற்றினர். இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி டீன் கூறுகையில், “குழந்தைக்கு சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன், அல்ட்ராசவுண்ட் மற்றும் எக்கோ முதலிய பரிசோதனைகள் செய்யப்பட்டன. ரத்த நாளங்கள் திசுவின் அடிப்பகுதியில் செல்வதால், அவை பிணைந்து கட்டியாக மாறும் தன்மை பெறுகின்றன. இத்தகைய கட்டிகள் எங்கு எப்போது வேண்டுமானாலும் ரத்தம் கசிவது நிற்கும் வாய்ப்புள்ளது. அதுவும் இந்த குழந்தைக்கு காலில் கட்டி இருந்ததால், கால் அசைவினால் ரத்தம் வடிவதற்கான வாய்ப்பு இருந்தது.
தொடைப்பகுதியில் இருந்து தோல் எடுக்கப்பட்டு ஒட்டாமல் இருக்கும் இடத்திலேயே முறையாக பிளாஸ்டிக் சர்ஜரி நுட்பமாக செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் மிகவும் நுட்பமாக கையாண்டதால் இந்த அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. தற்போது குழந்தையும் நலமுடன் உள்ளது” என்று கூறினார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்களுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.