பிறர் மனைவியை மணப்பெண்ணாக்கும் ஆப்பிரிக்க பழங்குடியினர்: வினோதமான திருமண மரபில் வாழும் மக்கள்!!

268

ஆப்பிரிக்காவில்..

மேற்கு ஆப்பிரிக்காவின் வொடாபே என்ற பழங்குடியினரின் வினோதமான திருமண மரபு முறையை கொண்டுள்ளனர், அதாவது இந்த பழங்குடி மக்கள் அடுத்தவர்களின் மனைவிகளை தன் வசம் ஈர்த்து திருமணம் செய்து கொள்கிறார்கள், இந்த திருமண முறை இந்த பழங்குடி மக்களின் மரபு என்றும் சொல்லப்படுகிறது.

வோடபே பழங்குடியின மக்களின் முதல் திருமணம் குடும்பத்தினர் ஒப்புதல் மற்றும் விருப்பப்படி நடைபெறுகிறது. ஆனால் அவர்களின் இரண்டாவது திருமணம் மற்றவர்களின் மனைவியை ஈர்த்து தன்வசப்படுத்தி செய்து கொள்ள வேண்டும்.

பிறர் மனைவிகளை ஈர்க்க முடியவில்லை என்றால், அவர்களால் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியாது, ஆனால் யாரேனும் பிறர் மனைவிகளை ஈர்த்து கொண்டு விட்டால், அவர்கள் இருவருக்கும் அந்த பழங்குடி மக்களே திருமணம் செய்து வைக்கின்றனர்.


இந்த பழங்குடியினர் ஒவ்வொரு ஆண்டும் கரேவோல் என்ற திருவிழாவை கோலாகலமாக நடத்துகின்றனர். இந்த திருவிழாவில் பாரம்பரிய ஆடைகள் மற்றும் முகத்தில் வண்ணங்களை பூசிக் கொண்டு இளைஞர்கள் பெண்களின் இதயங்களை வெல்ல முயற்சி செய்கின்றனர்.